4ஆம் திகதி விவா­திக்க ஆயத்தமாகும் அரசியல் கட்­சிகள்.! - THAMILKINGDOM 4ஆம் திகதி விவா­திக்க ஆயத்தமாகும் அரசியல் கட்­சிகள்.! - THAMILKINGDOM

 • Latest News

  4ஆம் திகதி விவா­திக்க ஆயத்தமாகும் அரசியல் கட்­சிகள்.!

  ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொட ர்பில் அர­சியல் கட்­சிகளும் பொது அமைப்­புக்­களும் தொடர்ந்து அர­சியல் காய் நகர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. 

  எதிர்­வரும் 4ஆம் திகதி பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவா­திக்­கப்­ப­ட­வுள்ள நிலை யில் அன்­றைய தினம் என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பது தொடர்­பி­லேயே தற்­போது தேசிய அர­சி­யலில் பர­வ­லாக விவா­திக்­கப்­பட்டவாறு உள்ளது. 

  ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யினர் தாம் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் வெற்­றி­ய­டைவோம் என மிகவும் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்து வரு­கின்­றனர். அதா­வது இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் மூலம் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யா­னது அர­சி­யலில் ஒரு நிலை­யான திருப்­பு­மு­னையை அடையும் என மிகவும் உறு­தி­யான முறையில் ஐக்­கி­ய ­தே­சி­யக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் தெரி­வித்தவாறு உள்ளனா். 

   அத்­துடன் தமக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரின் ஒரு பிரி­வி­ன­ரதும் ஆத­ரவு கிடைப்­பது உறுதி என்றும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் வெற்­றி­கொள்வோம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வித்துள்ளனா். 

  மறு­புறம் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சமர்ப்­பித்­துள்ள கூட்டு எதிர்க்­கட்­சி­யா­னது இந்த முயற்­சியில் தாம் பாரிய வெற்­றியை அடைவோம் என தெரி­வித்து வரு­கின்­றது. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சிக்­குள்­ளேயே அதி­க­மா­ன­னோரின் ஆத­ரவு கிடைக்குமென கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் தெரிவித்துள்ளனா். 

  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இது­வரை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மான நிலைப்­பாட்டை அறி­விக்­க­வில்லை. எப்­ப­டி­யி­ருப்­பினும் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யி ல்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்­பின்­போது சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் இரண்­டாக பிள­வு­படும் அபாயம் காணப்படுவதாக விவாதிக்கப்பட்டுள்ளது. 

  இதே­வேளை நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவ­கா­ரத்தில் திருப்­பு­மு­னை­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்ற தமிழ் தேசி­யக்­கூட்­டப்­பை­பா­னது எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை கூடி தீர்­மா­னிக்­க­வுள்­ளது.

  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்த்து வாக்­க­ளிக்கும் என ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி நம்­பிக்­கொண்­டி­ருக்கும் சூழலில் அது­தொ­டர்­பான இரா­ஜ­தந்­திர நகர்­வு­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. அதே­போன்று கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

  தற்­போ­தைய நிலை­மையில் பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சிக்கு 107 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளனர். அதில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷவும் அத்­து­ர­லிய ரத்­தின தேரரும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது எவ்­வா­றான முடிவை எடுப்­பார்கள் என்­பது குறித்து இது­வரை வெளிப்­ப­டுத்­த­வில்லை.

  அதே­போன்று இந்த ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி வச­முள்ள 107 எம்.பி.க்களில் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 7 உறுப்­பி­னர்­களும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் 5 உறுப்­பி­னர்­களும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் 6 உறுப்­பி­னர்­களும் இடம்­பெ­று­கின்­றனர்.

  மறு­புறம் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வசம் 95 எம்.பி.க்கள் உள்னர். அதில் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன தரப்பிடம் 42 எம்.பி.க்கள் உள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் 16 எம்.பி.க்களும் ஜே.வி.பி. வசம் 6 எம்.பி.க்களும் உள்ளனர்.

  அதேபோன்று ஈ.பி.டி.பி. வசம் ஒரு எம்.பி. பதவியும் உள்ளமை குறிப்பிடத்த க்கது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் எதிர்வரும் நான்காம் திகதிக்கான விவாதத்தில் பங்கேற்பதற்கு ஆயத்தமாகியுள்ளனா். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: 4ஆம் திகதி விவா­திக்க ஆயத்தமாகும் அரசியல் கட்­சிகள்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top