கூட்­ட­மைப்பு விடயமாக சி.வி.விக்­னேஸ்­வரன்.! - THAMILKINGDOM கூட்­ட­மைப்பு விடயமாக சி.வி.விக்­னேஸ்­வரன்.! - THAMILKINGDOM

 • Latest News

  கூட்­ட­மைப்பு விடயமாக சி.வி.விக்­னேஸ்­வரன்.!

  உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்சி அமைப்­பதற்காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆத­ரவைப் பெற்றுக் கொண்­டமை சுய­ந­லத்­திற்­காக கூட்­ட­மைப்பு கொள்­கையை கைவிட்­டு ­விட்­டது என்­ப­தையே எடுத்துக் காட்­டு­வதாக வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரிவித்து ள்ளாா். 

  கந்­தர்­மடம், அர­சடி வீதியில் அமைந்­துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்­கத்தின் அலு­வ­லகம் நேற்று முத­ல­மைச்­சரால் திறந்து வைக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்­வின்­போது ஊட­க­வி­ய­லா­ள ர்கள், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஈ.பி.டி.பி. யுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைத்து வரு­கின்­றமை தொடர்பில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர். 

  இதற்குப் பதி­ல­ளிக்கும் போதே முத­ல­மைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் பதி­ல­ளிக்கையில், 

  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் ஈ.பி.டி.பி.யுடன் தாங்கள் பேரம் பேச­வில்லை என்றும், ஈ.பி.டி.பி. தமக்கு நேர­டி­யாக ஆத­ரவு தர­வில்லை என்றும் ஊட­கங்­க­ளுக்கு கூறி­யுள்ளார். 

  ஆனால் என்­ன­தான் இருந்­தாலும் ஒரு­மித்து நிய­ம­னங்கள் நடை­பெ­ற­வில்லை என்று தெரி­கின்­றது. பதவி வகிக்­கின்­ற­வர்கள் ஆட்­சியை சரி­யான முறையில் கொண்டு நடத்த வேண்டும். 

  சாவ­கச்­சேரி நகர சபையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு, ஈ.பி.டி.பி. ஆத­ரவு வழங்­கி­யது என்­பது தொடர்பில் சரி­யாக நான் அறி­ய­வில்லை. என்­ன­வாக இருந்­தாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆத­ர­வுடன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்­சியை அமைத்தால், கூட்டமைப்பு கொள்கைகளை கைவிட்டு சுயநலன்கள் தான் எமக்கு முக்கியம் என்ற கருத்து ஏற்படும் என்பது தான் என்னுடைய அவதானிப்பாக உள்ளது. 

   யாழ்.மாந­கர சபையின் ஊழலை விசா­ரணை செய்ய வேண்டும். அத்­துடன் ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சி­யினர் கடந்த காலங்­களில் யாழ்.மாந­கர சபையை ஆட்சி செய்­த­போது மேற்­கொண்ட ஊழல் தொடர்பில் தற்­போது ஆட்­சிப்­பீடம் ஏறி­யுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். 

  அதில் உள்ள உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் தனது பங்­கிற்கு விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும். இவ்­வி­ட­யத்தை விசா­ரணை செய்ய ஏற்­க­னவே வடக்கு மாகாண சபை­யினால் விசா­ரணைக் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. 

  அக் குழு நடத்­திய விசா­ர­ணை­களில் ஈ.பி.டி.பி.யினரின் ஆட்­சியில் யாழ்.மாந­கர சபை நிர்­வா­கத்தில் ஊழல்கள் நடை­பெற்­றுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. எனவே தற்­போது ஆட்­சியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பும் ஈ.பி.டி.பி. கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர் பில் முறை­யான விசா­ரணை செய்ய வேண்டும். அவர்கள் செய்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளாா். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கூட்­ட­மைப்பு விடயமாக சி.வி.விக்­னேஸ்­வரன்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top