Breaking News

கார்கில் போர் வெற்றி போர் நினைவிடத்தில் அஞ்சலி!

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுரு விய பாகிஸ்தான் படையினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சுமார் 200 கிமீ வரை ஆக்கிரமித்துள்ளனா்.

இந்திய நிலைகளையும் கைப்பற்றி யது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப் பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டிய டித்தது. இந்த போரின்போது வீரமர ணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 26-ம் திகதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

கார்கில் வெற்றி தினத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கமும் செலுத்தப்படுகிறது. அவ்வகையில் இன்று நாடு முழுவதும் கார் கில் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. 

ஜம்மு காஷ்மீரின் டிராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து சிறப்பித்துள்ளனா்.