Breaking News

யேமனில் 40 சிறுவர்கள் கொல்லப்பட்டற்கு காரணம் அமெரிக்கா - சிஎன்என் தெரிவிப்பு!

யேமனில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் போது 40 சிறுவர்கள் கொல்லப்படுவதற்கு காரணம் அமெரிக்காவே என்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர் என சிஎன்என் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

யேமனில் சவுதிஅரேபியா தலைமையி லான கூட்டணியினர் மேற்கொண்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் 40 சிறுவர்கள் கொல்லப்பட்டமை சர்வதேச அளவில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதற்கு காரணம் அமெரிக்காவினால் வழ ங்கப்பட்ட குண்டுகளே இத் தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. யேமனியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் வெடிகுண்டுநிபுணர்களின் உதவியுடன் இதனை உறுதி செய்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான லொக்கீட் மார்ட் டின் நிறுவனம் தயாரித்த 227 கிலோகிராம் எடையுள்ள லேசர் மூலம் ஏவப் படும் எம்கே 82 என்ற குண்டே சிறுவர்கள் பயணம் செய்த விமானத்தின் மீது வீசப்பட்டதாக சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளது. 

 2016ம் ஆண்டு யேமனில் மரணவீடொன்றின் மீது இதேபோன்றதொரு குண்டு வீசப்பட்டது இதன் போது 150ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக  சிஎன்என் தெரிவித்துள்ளது. 

மரணச்சடங்குகள் நடைபெற்ற வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கு தலை தொடர்ந்து இவ் வகை குண்டுகளை சவுதி அரேபியாவிற்கு வழங்கு வதை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தடை செய்தி ருந்தார். 

மனித உரிமை கரிசனைகளை காரணம் காட்டி அவர் இத் தடையை விதித் திருந்தார். எனினும் டிரம்ப் நிர்வாகம் இத் தடையை நீக்கியிருந்தது. மார்ச் மாதம் யேமனின் சந்தையொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 80 பேர் கொல்லப்படுவதற்கும் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட குண்டுகளே காரணமெனத் தெரிவித்துள்ளாா்.