Breaking News

கிழக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பு சம்பந்தன்.! (காணொளி)

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி விடயமாக விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. 

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை மற்றும் விவ சாயம் போன்றன தொடா்பாக மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளாா். 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிற்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகம விற்குமிடையில் சந்திப்பொன்று நேற்று மதியம் திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. 

இச் சந்திப்பில் ஆளுனரது செயலாளர்கள் திணைக்களச் செயலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரங்களுக்கு அதிகமாக நடை பெற்ற சந்திப்பின் பின் செய்தியாளர்களுக்கு சந்திப்பு குறித்து தெளிவுபடுத் தப்பட்டது. 

குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் வேலை இல்லாப் பிரச்சினை குறித்து, அபிவிருத்தி, விவசாயம், தெருமற்றும் குழங்கள் புனர மைத்தல், சுகாதாரம் தொடா்பாக கலந்துரையாடியுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளாா். 

651 தொண்டராசிரியர்களுக்கும் 1700க்கும் அதிகமான வேலையற்றபட்டதாரி களுக்கும் 351 டிப்ளோமாதாரிகளுக்கும் அத்துடன் சுகாதார உத்தியோகத்தர் களுக்கும் உள்ளடங்கலாக 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பில் தாம் எதிர்க்கட்சித் தலைவர் ஊடாக மத்திய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளதாக ஆளுனர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள் ளாா்.