Breaking News

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டோரை தண்டிக்க முடியாது - மைத்திரி!

சிறிலங்காவில் போர் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள எவரையும் தண்டிக்க இடமளிக்கப் போவதில்லையென சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன நிவ்யோர்க் நகரில் மீண்டும் சூளுரைத்துள்ளாா். 

யங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இறுதி நிலை சிப்பாய் முதல் படைத் தளபதிகள் வரையான அனைவரும் சிரேஷ்ட படை வீரர்கள் எனக் குறிப் பிட்டு புகழாரம் சூட்டியுள்ள சிறில ங்கா அரச தலைவர், அனைவரினதும் கெரளவத்தை பாதுகாப்பதற்கு அரசா ங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுமெனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரிலுள்ள சிறிலங்கா பிரஜைகளுடன் நடை பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் நேற்றைய தினம் மாலை, நிவ்யோர்க் நகரில் வாழும் சிறிலங்கா பிரஜைகளை சந்தித்து கலந் துரையாடியுள்ளாா்.

கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்கள், வர்த்தகர்கள், பல்கலைக்கழ மாண வர்கள் உட்பட பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் போது சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினர் தொடர்பில் புகழாரம் சூட்டியது போல் இந்த உரையிலும் புகழ்பாடியுள்ளாா்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்ட எவரையும் தண் டிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்த சிறிலங்கா அரச தலைவர் போரை முடிவுக்கு கொண்டுவந்த படை யினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருவ தாகவும் தெரிவித்துள்ளாா்.

எனினும் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் யுத்தத்துடன் எந்த வித்திலும் தொடர்புபடாத குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகளையே படையினரை தண்டித்து வருவதாக குற்றம்சாட்டி பிரசாரம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளாா்.

நீதியை நிலைநாட்டும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்ட நடைமுறைகளை படையினரை தண்டிக்கும் செயல் அல்ல என்று தெரிவித்த சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால, இதற்காகவே தன்னை 2015 ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

சிறிலங்கா இராணுவத்தை பயன்படுத்தி யாராவது குற்றமிழைத்திருந்தால் அவர்களை தண்டிப்போமெனத் தெரிவித்த மைத்ரிபால சிறிசேன, அதே வேளை இராணுவத்தில் இருந்து தவறிழைத்திருந்தால் அவர்களும் சட்டத் தின் முன் தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளாா். 

- நன்றி ஐ.பி. சி. இணையத்திற்கு -