Breaking News

ஜனநாயகத்திற்கான போராட்டத்தை கைவிட்டு விடாதீர்கள் மக்களிடம் ரணில்.!

இலங்கையின் அதிபராக பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கேவை அப் பதவியிலிருந்து நீக்குவதாகவும், புதிய பிரதமராக போர்க்குற்றங்களுக்கு ஆளான ராஜபக்சேவை நியமிப்பதாகவும் அந்நாட்டு அதிபர் மைத்ரி கடந்த 26 ஆம் தேதி தெரிவித்துள்ளாாா்.

ஆனால், இலங்கையின் அரசியல் யாப்புக்கு முரணாக தாம் பதவி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட் டதை ஏற்றுக்கொள்ள முடியாதென திட்ட வட்டமாக தெரிவித்துள்ள ரணில், உடனடியாக பாராளுமன்றத் தினை கூட்டுமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தவாறு உள்ளாா்.

ஆனால், பாராளுமன்றத்தினை 16 ஆம் தேதி வரை முடக்கிவைப்பதாக அறி வித்திருந்த மைத்ரி, உலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக எதிர்வரும் 14 ஆம் தேதி பாராளுமன்றம் கூடுமெனத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், புதிய பிரதமராக அதிபர் மைத்ரியால் நியமிக்கப்பட்ட ராஜபக்சே, பாராளுமன்றம் கூட்டப்பட்டால் தமது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் அமைச்சு பதவிகள், சலுகைகள் உள் ளிட்டவற்றை வழங்கி குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு வருவதாக எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்துகின்றன.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வெளிப்படையான கோரிக்கை விடுத்துள் ளார் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதர வாக இலங்கையின் வீதிகளில் இறங்கி போராடிய மக்களுக்கு நன்றி தெரி வித்துள்ள அவர், ஜனநாயகத்திற்கான போராட்டத்தினை கைவிட்டு விட வேண்டாமெனத் தெரிவித்துள்ளாா்.