Breaking News

நான் ஒருபோதும் இனவாதத்துடன் செயற்படவில்லை - மகிந்த!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்களுக்கு எதிர்காலத்தில், எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்போவது இல்லையென, ஸ்ரீலங்காவின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பி னர்களை, மாளிகாவத்தையில் அமை ந்துள்ள உலமாவின் தலைமையகத் தில் சந்தித்து கலந்துரையாடிய சந் தர்ப்பத்தில் பிரதமர் இவ்வாறு தெரி வித்துள்ளாா்.



நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தத்தின்போது, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்கள் முகங்கொடுத்த சகல பிரச்சினைகளுக்கும் தனது தலைமையிலான அரசிலேயே தீர்வு காணப்பட்டதாக பிரதமர் சூளுரைத்துள் ளாா்.

மூதூரில் ஏற்பட்ட பிரச்சினைகள், முஸ்லிம்கள் வட, கிழக்கில் விவசாயம் செய்ய முடியாத நிலைமை, வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களது மீளக் யேற்ற பிரச்சினை என்பவற்றை தானே தீர்த்து வைத்ததாகவும் பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு சகலதரப்பினரும், சகல இனங்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும், தான் ஆட்சியில் இருந்த போது இன, மத பேதமின்றி செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும், இனவாத செயற்பாடுகள் நாட்டில் தலைதூக்காமல் இருக்க தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுத் தாகவும்  தெரிவித்துள்ளார்.

அளுத்கம சம்பவத்தின்போது தானும் அப்போதைய பாதுகாப்புச் செயலா ளாரும் நாட்டில் இருக்கவில்லை எனவும், அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களது வீடுகளை மீள நிர்மாணித்துக் கொடுத்ததாகவும், முஸ்லிம்களுக்கு இனி ஒருபோதும் எவ்வித பிரச்சினையும் ஏற்படாதெனத் தெரிவித்துள்ளாா். 

அரசியல் இலாபங்களுக்காக செயற்படும் இன ரீதியாக கட்சிகள் சகல இனங் களிலும் காணப்படுவதாகவும், அவர்களே அவ்வப்போது இனங்களுக்கிடை யில் பிளவை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளாா்.

எவ்வாறெனினும், தேசிய கட்சிகளில் அங்கம் வகிக்கும்போது இவ்வாறான இன மத ரீதியான பிரிவுகள் இன்றி நாம் இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட முடியும் எனவும் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தாம் ஒருபோதும் இன வாதத்துடன் செயற்படவில்லையெனத் தெரிவித்துள்ளாா்.