சக கட்சிகளையும் உள்ளடக்கி மிக விரைவில் தேசிய அரசாங்கம் உருவாகும்.! - THAMILKINGDOM சக கட்சிகளையும் உள்ளடக்கி மிக விரைவில் தேசிய அரசாங்கம் உருவாகும்.! - THAMILKINGDOM

 • Latest News

  சக கட்சிகளையும் உள்ளடக்கி மிக விரைவில் தேசிய அரசாங்கம் உருவாகும்.!

  ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி தேசிய அரசாங்கமொன்றை மிக விரைவில் அமைப்பதன் மூலமாக தற்போதைய அரசாங்கம் இஸ்திரத்தன்மையைப்பெறுமென சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

  அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் போது சில அரசியல்வாதிகள் பதவி மற்றும் பணத்திற்காக பொய்யான அரசாங் கத்தில் இணைந்தன.

  ஆன போதிலும், அழைப்புக்கள் அச் சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் அவ ற்றிற்கு தலைசாய்க்காது நீதி, நியா யம் ஜனநாயகத்திற்காக அகிம்சை வழியில் போராடினோம் எனத் தெரி வித்துள்ளாா்.

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாமன்ற நாடா ளுமன்ற உறுப்பினர் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகப் பதவி யேற்றத்தையடுத்து ஏறாவூரில் பொது மக்களினால் வழங்கப்பட்ட வரவேற்பு கௌரவத்தினையடுத்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகை யிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

  இராஜாங்க அமைச்சரை பொது மக்கள் ஏறாவூர் மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியிலிருந்து புன்னக்குடா வீதி வழியாக அழைத்துச் சென்றனர். இந் நிகழ் வில் ஆயிரக்கணக்கானோர் இணைந்திருந்தனர். புகையிரத நிலைய வீதி யில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

  சமூக முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். இங்கு அலி ஸாஹிர் மௌலானா தொடர்ந்து பேசுகையில், "எமது நாட்டில் அரசியல் குழப்பம் தற் போது தணிந்துள்ளது.

  இந்நிலையில், ஏனைய கட்சிகளிலிருந்து அரசாங்கத்துடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு தேசிய அரசாங்கமொன்று மிக விரைவில் அமைக்கப்படுவதுடன், மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்கு அமைச்சுப்பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

  அரசியல் குழப்பத்தின் போது, நாட்டைப் பாதுகாப்பதற்காக எமது கட்சியின் தலைமைத்துவம் பாரிய பங்களிப்பினைச் செய்தது. எமது சமூகம், எதிர் காலச் சந்ததிகள் சுதந்திரமாக, சுபீட்சமாக வாழ வேண்டுமென்பதற்காகவே  உறுதியுடன் கொள்கை தவறாது செயற்பட்டோம்.

  அதையடுத்து, எமக்குக்கிடைத்த நீதிமன்றத்தீர்ப்பு எதிர்காலத்திற்கு சிறந்த ஒரு பாடமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளாா்.  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சக கட்சிகளையும் உள்ளடக்கி மிக விரைவில் தேசிய அரசாங்கம் உருவாகும்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top