சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் முயற்சியில் - சந்திரிக்கா - THAMILKINGDOM சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் முயற்சியில் - சந்திரிக்கா - THAMILKINGDOM
 • Latest News

  சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் முயற்சியில் - சந்திரிக்கா

  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கை மிகவும் மும்முரமாக நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, கட்சி சம்மேளனத்திற்கு அழைப்பு கிடைக்கப்பெறா மையினாலேயே வருகை தரவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யின் மாநாடு கடந்த 4 ஆம் திகதி செவ்வாய் கிழமை நடைபெற்றுள்ளது.

  அந்த மாநாடு குறித்த சில விடயங்களை தெளி வுபடுத்த விரும்புகின்றேன். அதாவது கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாடு குறித்து இன்று வரையில் எனக்கு எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெற வில்லை.

  கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களுக்கு மாநாடு குறித்து தெளிவுபடுத்தப்பட் டுள்ளதுடன் சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை சுதந்திர கட்சியின கம்பஹா மாவாட்ட செயளாலர் லசந்த அழகிய வண்ண வழங்கியுள்ளார்.

  சுதந்திர கட்சியிலிருந்து என்னை தொடர்ந்தும் ஓரங்கட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை சம்மேளனத்திற்கு அழைப்படாமை ஊடாக வெளிப்படுகின்றது.

  எனவே தான் செவ்வாய் கிழமை நடைபெற்ற சுதந்திர கட்சி சம்மேளனத்தை தவிர்த்துக் கொண்டேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.


  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் முயற்சியில் - சந்திரிக்கா Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top