தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது குற்றச்சாட்டு - வரதராஐப் பெருமாள் - THAMILKINGDOM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது குற்றச்சாட்டு - வரதராஐப் பெருமாள் - THAMILKINGDOM
 • Latest News

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது குற்றச்சாட்டு - வரதராஐப் பெருமாள்

  நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்திருக்கின்ற வடக்கு கிழக்க்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஐப் பெருமாள் ஐன நாயகத்தைக் காப்பாற்றப் போவதாக கூட்டமைப்பினர் நாடகம் ஆடுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளாா்.


  அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

  அரசியல் யாப்பு நெருக்கடி அரசியல் யாப்புச் சதி என்று சொல்லப்பட்டிருந் தாலும் இந்த அரசியல் யாப்பு தவறா கப் பிரயோகிக்கப்பட்டது தவறாக அர்த்தம் சொல்லப்பட்டது எல்லாம் இன்றைக்கு இல்லை.

  இந்த அரசியல் யாப்பு வந்த காலத்தில் இருந்தே இந்த நாட்டில் அரசியல் யாப்புக்கள் தவறாகத் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1972. மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பாக இருந்தால் என்ன அது தமிழ் மக்களைப் பொறுத்தரைவயிலும் சரி சிங்கள மக்களைப் பொறுத்தவரையிலும் சரி தவ றாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

  தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல போராட்டம் எழும்பி வந்தது. அதே போல சிங்கள மக்கள் மத்தியில் இருந்த இளைஞர்களும் போராட வேண்டி வந்தது இந்த அரசியல் யாப்புக்களின் குறைபாடுகளே தான்.

  இப்பொழுது பிரதான இரண்டு அரசியல் அதிகாரங்களை மாறி மாறிக் கைப்பற் றுகின்ற குழுக்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தான் இந்த அரசி யல் யாப்பு நெருக்கடியாகச் சொல்லப்படுகிறது.

  அவர்களில் யாரைக் காப்பாற்றுவது என்பதற்கு அரசியல் யாப்பு ஐனநாயக த்தைக் காப்பாற்றுவது அரசயில் யாப்பைக் காப்பாற்றுவது என்று சொல்லப்ப டுவது எல்லாம் போலியான விடயம்.

  ஆவார்கள் இரண்டு பேரையும் தங்களுடைய ஆட்சிமுறையை பொறுத்த வரையில் இலங்கையின் பொருளாதார சம்மந்தப்பட்ட விவகாரம் சம்மந்தப் பட்ட விடயமாக இருந்தாலென்ன தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் சம் மந்தப்பட்ட விடயமாக இருந்தாலென்ன இந்த இரண்டு பேருமே ஒரே ஆட்கள் தான்.

  அவர்கள் மாறி மாறி ஆட்சியைப் பெறுவார்கள் ஆனால் தமிழ் மக்களுடைய நிலைமை ஒன்றாகத் தான் இருந்து வந்திருக்கிறது. எனவே அந்த இரண்டு பேரில் யாரைக் காப்பாற்றினால் ஐனநாயகத்தைக் காப்பாற்றலாம் என்று சொல்லுவதே முதலில் தவறு.

  அதற்கு மாறாக இரண்டு பேரையும் நெருக்கடியில் வைத்துக் கொண்டு தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வைக் காணுவது அல்லது தமிழ் மக்களுடைய நலன்களைக் காப்பாது என்ற அனுகுமுறை தான் இன்றைக்கு அவசியமான அனுமுறையாக இருக்க வேண்டுமென்பதே என்னுடைய கருத்து.

  இதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை என்ற விடயத்தை எடுத்துக் கொண் டால் அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்றதாக கூறிய ஐக்கிய தேசியக் கட்சி விடுதலை செய்ய மாட்டோம் என்று சொல்வதற்கு நூறு காரணங்களைக் கூறியிருந்தது.

  ஆனால் இப் பதவியில் அசைவு வந்தவுடன் மகிந்த ராஐபக்ச முகாமில் இருந்து தாம் வந்தவுடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்றோம் என்று கருத்து வருகிறன்றது. ஆனால் உண்மையில் இவர்கள் சொல்லிய அல்லது சொல்லி வருகின்ற காலத்திலேயே குறைந்த பட்சம் அரைவாசிப் பேரை என்றாலும் விடுவித்திருக்கலாம்.

  ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வாக்குறுதிகளைக் கொடுக்கின்ற போது மக் களால் தெரீவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டமைப்பு அந்த விடயத்தை ஏன் கையிலெடுத்து இருக்கக் கூடாது.

  தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு சம்மந்தப்பட்ட விடயத்தில் இந்த நெருக்கடி கால கட்டத்தில் எதனைப் பெறலாமோ அதனைப் பெறுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி இனி வந்தா லும் என்ன செய்யப் போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

  ஏனெனில் அதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை. அல்லது ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் இருந்திருந்தா ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி வந்திருக்கும் என்று சொல்லுவது எல்லாம் பொய்.

  அது சில வேளை பெட்டிகளில் எழுதி வைத்திருக்கலாம். ஆக இனி அர சியலமைப்பை திருத்துவதற்கான எந்தச் சந்தர்ப்பங்களும் இருக்கப் போவ தில்லை. அரசியல் யாப்பையே திருத்தாமல் என்னத்தை எல்லாம் பெற முடி யுமோ அதனைப் பெறுகின்ற விடயத்தைப் பெற்றிருக்கலாம்.

  தமிழ் மக்களின் பல பிரச்சனைகள் தொடர்பில் மகிந்த ராஐபக்சவை எழுத்தில் கேட்கின்றீர்கள். அது நல்ல விடயம். ஆனால் அதே விடயத்தை ஐக்கிய தேசி யக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கேளுங்கள்.

  ஆக என்ன ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டால் ஐனநாயகம் பிழைத்துப் போய்விடும். மகிந்த ராஐபக்சவிடம் கேட்டால் ஐனநாயகம் காப்பாற்றப்பட்டு விடும் என்று சொல்லுவது என்ன விவாதம்.

  இவை எல்லாமே வந்து கொழும்பில் தங்களுடைய ஐக்கிய தேசியக் கட்சி யோடு அல்லது ஆளும் வர்க்கத்தோடு தங்களுக்கு இருக்கக் கூடிய உறவு களைப் பாதுகாப்பதற்காக அரசியல் யாப்பைக் காப்பாற்றுவோம் ஐனநாய கத்தைக் காப்பாற்றுவோம் என்ற நாடகம் தான் நடக்கிறது.

  ஆகவே இந்த நெருக்கடி நிலையில் மாற்றான அனுகு முறையின் அடிப் படையில் எதைப் பேசி எதனைப் பெறலாம் என்பதை சிந்தியுங்கள். அந்த அனுகுமுறைள் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் எங்களிடம் வாருங் கள் நாங்கள் அதனை உங்களுக்குச் சொல்லித் தருகின்றோம் எனத் தெரி வித்துள்ளாா்.


  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது குற்றச்சாட்டு - வரதராஐப் பெருமாள் Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top