ரணில் பதவியிலுள்ள வரை ஐ.தே.க. ஐ கவிழ்க்க முடியாது - தலதா அதுகோரள.! - THAMILKINGDOM ரணில் பதவியிலுள்ள வரை ஐ.தே.க. ஐ கவிழ்க்க முடியாது - தலதா அதுகோரள.! - THAMILKINGDOM

 • Latest News

  ரணில் பதவியிலுள்ள வரை ஐ.தே.க. ஐ கவிழ்க்க முடியாது - தலதா அதுகோரள.!

  மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நடைபெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். மோசடிகள் தொடர் பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்ற வண்ணமே உள் ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சி தலை மையிலான அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாதென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள் ளாா். 
  பலாங்கொடை பிரதேசத்தில் நடை பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ் வாறு குறிப்பிட்ட அமைச்சர் அது கோரள மேலும் தெரிவிக்கையில்....,

  அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் தகுந்த பிரசார நடவ டிக்கைகள் முன்னெடுக்காமையால் மக்களுக்கு தெரியப்படுத்த அந்த திட்டங் களின் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

  ஆனால் வரலாற்றில் எந்த அரசாங்கமும் தொகுதியோன்றுக்கு 770 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருக்க முடியாது. 20 வருடங்களில் செய்யாத வேலைத்திட்டங்களை குறுகிய மூன்றரை வருடங்களில் நாம் செய்து முடித் துள்ளோம். எங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக எவரும் கவனம் கொள்ளவில்லை.

  ஆட்சியைப் பொறுப்பேற்றதில் இருந்து இயற்கை அனர்த்தம், அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சிகள், குண்டுத்தாக்குதல் என அனைத்து சவால்களையும் எதிர் கொண்டோம். இவற்றை காரணங்காட்டி எங்களால் எதையும் செய்யாமல் இருந்திருக்க முடியும்.

  ஆனால் அபிவிருத்தி பணிகளை நாங்கள் ஒருபோதும் இடைநிறுத்த போவ தில்லை. மகிந்த ராஜபக்ஷ காலத்தில் தற்போதுள்ள எந்த சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. கடந்த அரசாங்கம் அபிவிருத்தியின் பேரைக் கொண்டு மக்களின் பணத்தை சூறையாடினார்களோ என்று சந்தேகம் ஏற்படு கின்றது.

  ஆனால் நாங்கள் மக்களின் பணத்தை சூறையாடி பிரச்சினையை ஏற்படுத்த போவதில்லை. 1977 தொடக்கம் 1994 ஆண்டு வரையில் செய்த வேலைத் திட் டங்களே 2015 ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

  இன்று அனைவரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் குறைக்கூறுகின்றனர். ஆனால் பிரதமரின் அலோசனைகளின் காரணமாகவே இந்த அபிவிருத்தி பணிகளுக்கான நிதி முறையாக கிடைக்கப்பெறுகின்றது. பிரதமர் ரணில் விக்ர மசிங்க இருக்கும் வரை இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது.

  அதனை கடந்த வருடம் மூண்ட அரசியல் நெருக்கடியின்போது நிரூபித்து காட்டியிருந்தோம். சமூர்த்தி கொடுப்பனவு ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல் வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. கடந்த அரசாங் கத்தால் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடாவடிகள் தொடர் பான விசாரணைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.

  வெள்ளைவேன் கடத்தல் கலாச்சாரத்தை கொண்ட ஆட்சியில் மகிந்த சர்வாதி கார பிரிவினரின் செயற்பாடுகளின் காரணமாகவே சுதந்திரகட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன அக் கட்சியை விட்டு வெளி யேறினார். ஆனால் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க போவதில்லை யெனத் தெரிவித்துள்ளாா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ரணில் பதவியிலுள்ள வரை ஐ.தே.க. ஐ கவிழ்க்க முடியாது - தலதா அதுகோரள.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top