தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை வடக்கு, கிழக்கில் அழிக்க ஏற்பாடு - சிவாஜிலிங்கம் - THAMILKINGDOM தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை வடக்கு, கிழக்கில் அழிக்க ஏற்பாடு - சிவாஜிலிங்கம் - THAMILKINGDOM
 • Latest News

  தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை வடக்கு, கிழக்கில் அழிக்க ஏற்பாடு - சிவாஜிலிங்கம்

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்ச மான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமான வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

  திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங் களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட் டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம் வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிண றுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

  திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத் துக்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் கடந்த ஒருவார காலமாக உடைக்கப்பட்டு வருவதாக தகவல் கள் வெளியாகியுள்ளன.

  குறித்த இடத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியிருந்த நிலை யில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்படுகின்றது. அத்துடன் கன்னியா வெந்நீரூற்று கிணறுகளுக்கு அருகிலுள்ள சிவன் ஆலயத்தின் தீர்த் தக் கேணியும் உடைக்கப்படுவதாக சிவாஜிலிங்கம் யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துளார்.

  கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கன்னியா வென்நீர் ஊற்று பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடிக்கப்படுவதை நிறுத்தாத பட்சத்தில் எதிர்வரும் வாரம் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை வடக்கு, கிழக்கில் அழிக்க ஏற்பாடு - சிவாஜிலிங்கம் Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top