Breaking News

வெளிநாட்டு அகதிகளுக்கான இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கான போடப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நேற்றைய தினத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. 

இலங்கையில் தங்கியிருந்த சுமார் 1600 அகதிகள் அண்மையில் இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின் னர் பாதுகாப்புக்காக நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் தங்க வைக்கப் பட்டிருந்தனர். இந்நிலையில் வவு னியா கூட்டுறவுக் கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் போராளி களுக்கு புனர்வாழ் வளிக்கும் புனர்வாழ்வு நிலையத்தின் கட்டிடமொன்றில் தங்கி வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் தங்கவைக்கப்பட்ட கட்டிடத்தினை சூழவும் குறித்த பகுதியிலும் இரா ணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் நேற்றைய தினத்தில் இருந்து குறித்த பாதுகாப்புக்கு நிறுத்தப்பட் டிருந்த இராணுவத்தினர் விலக்கப்பட்டதுடன் முழுமையாக பொலிஸாரின் பாதுகாப்பினுள் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த அகதிகளுக்கான வசதிகளை ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டு முன்னெடுத்துள்ளது.