Breaking News

புதிய ஆடையுடன் நாளை களமிறங்கும் இந்தியா

உலககோப்பையில் நாளை இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய உடை அணிந்து விளையாடத் தயராகியுள்ளது. 

நடைபெற்று வரும் உலககோப்பை யின் 38 ஆவது போட்டி நாளை மாலை 3 மணிக்கு பேர்மிங்காமில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக் கிடையில் நடைபெறவுள்ளது. இந் நிலையில் இந்திய அணி தனது புதிய உடையை அறிமுகம் செய்துள்ளதுடன் இதனை அணிந்தே நாளை போட்டி யில் களமிறங்க வுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையில் இதுவரை நடந்து முடிந் துள்ள போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் நீலநிற உடை அணிந்து விளையாடி வந்துள்ளன. சர்வதேச போட்டிகளில் மோதும் இரு அணிகளும் ஒரே நிறத்தில் உடை அணிந்து விளையாடக் கூடா தென ஐ.சி.சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயெ புதிய உடை அணிந்து விளையாட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போதைய நிலையில் இங்கிலாந்து அனைத்து போட் டியை நடத்தும் நாடு என்பதால் உடையை மாற்ற முடியாது. எனவே இந்திய அணி தனது ஆடையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதுள்ளதை அடுத்தே இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்திய அணி புதிய உடையை தேர்வு செய்த நிலையில்அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதன்படி வீரருக்கான உடையின் கழுத்து பகுதி நீலநிறமாகவும், சட்டையின் முன்பக்கம் இந்திய அணியின் பெயருடன் நீல நிறமாகவும் காட்சியளிக்கிறது.

மேலும் தோள்பட்டை, கைகளில் காவி நிறமாகவும், பின்புறம் முழுவதும் மஞ் சள் நிறமாகவும் ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற வரும் அனை த்து போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 11 புள்ளி கணக்கில் 2 ஆம் இடத்தை வகித்துள்ளது.