Breaking News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்கள் கைது - இன்டர்போலின் கருத்து என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களில் முக்கியமானவர் என கருதப் படும் அகமட் மில்கான் ஹயாத்து முகமட் மத்தியகிழக்கு நாடொன்றில் கைது செய்யப்படுவதற்கு இன்டர்போலின் சிகப்பு எச்சரிக்கையே காரணமாகயிருந் ததாக அவ் அமைப்பின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக் கப்படுபவர்கள் மத்திய கிழக்கு நாடுக ளில் கைது செய்யப்படுவதற்கு சர்வ தேச பொலிஸாரின் நடவடிக்கையே காரணம் என இன்டர்போலின் செய லாளர் நாயகம் யுர்ஜென் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இன்டர்போல் உடனடியாக வெளி யிட்ட சிகப்பு எச்சரிக்கை காரணமாகவே இவர்களை மத்திய கிழக்கு நாடுக ளில் கைதுசெய்ய முடிந்ததாகத் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளிற்கு உதவுவதற்காக இன்டர்போல் இந்த சிகப்பு எச்சரிக்கையை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருப்பது விசாரணைக்கு மிகவும் முக்கிய மான விடயம் என தெரிவித்துள்ள இன்டர்போலின் செயலாளர் நாயகம் யுர்ஜென் ஸ்டொக் இதற்கு உதவியதற்காக இன்டர்போல் பெருமைப்படுகின் றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவாளிகளை கைதுசெய்து நீதியின் முன் நிறுத்தும் நடவடிக் கைகளில் எங்கள் உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு வழங்க செய்வதற்கு சிகப்பு எச்சரிக்கை ஒரு முக்கியமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இன்டர்போலை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு உடனடியாக அனுப்பப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்