Breaking News

7000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!


நாட்டில் இன்றைய தினம் (23) மேலும் 866 கொவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7000 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் இதுவரை 7,153 கொவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 3,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று வரை 3,664 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.

அவர் சீனாவின் துபே பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைத்தந்த சீன பெண்னாவார்.

கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி அடையாளளம் காணப்பட்டார்.

அவர் ஒரு சுற்றுலா வழிக்காட்டியாவார்.

மே மாதம் 19 ஆம் திகதி வரை ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், ஜூன் மாதம் 24 ஆம்; திகதியாகும் போது அந்த எண்ணிக்கை இரண்டாயிரமாக அதிகரித்தது.

ஓகஸ்ட் 30 ஆம் திகதியாகும் போது 3000 ஆக காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை, ஒக்டோபர் 6 ஆம் திகதியாகும் போது 4000 ஆக உயர்வடைந்தது.

ஓக்டோபர் 13 ஆம் திகதியாகும் போது தொற்றாளர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் இரண்டாயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை விசேட அம்சமாகும். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.