வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு! - THAMILKINGDOM வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு! - THAMILKINGDOM

 • Latest News

  வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!

   

  வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

  இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பெப்ரவரி 4ம் திகதி கடைகள்,வர்த்தக நிலையங்களை பூட்டி போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஹர்த்தால் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

  எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தபிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி இடம்பெறவுள்ளது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு! Rating: 5 Reviewed By: news
  Scroll to Top