100 நாள் வேலைத்திட்டத்தின் மீது குற்றச்சாட்டு
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் தேசிய ஆலோசனை குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ஜனவரி 12ஆம் திகதி தேசிய ஆலோசனை குழு அமைக்கப்படல் வேண்டும்.எனினும் குறித்த குழு அமைக்கப்படாமைக்கான காரணம் தெரியவரவில்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
புதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட பின்னர் இந்தக்குழு அமைக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
.jpg)







