Breaking News

வடக்கில் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு

வடமாகாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் கடந்த 2014ஆம் வருடத்தில்  அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் ரீ.விஸ்பரூபன், நேற்று தெரிவித்தார்.  

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,   போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான சமூக, கலாசார சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றன.கடவுள் நம்பிக்கை இல்லாது இளைஞர்கள் தவறான வழியில் செல்வதனால் அவர்களுக்குரிய கட்டுப்பாடு இல்லாமல் இருக்கின்றது. இதனால் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த முடியாமல் போகின்றது' என்றார்.     

'வடமாகாணத்தில் கடந்த வருடம் சிறுவர்களுக்கு எதிரான பல்வேறுவகையான 958 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. 


150 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகியும், 57 சிறுவர் பாலியல் துன்புறுத்தல் முயற்சியில் பாதிக்கப்பட்டும், 118 சிறுவர்கள் பாலியல் சேஷ்டைக்கு உட்படுத்தப்பட்டும், 56 சிறுவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகியும் உள்ளனர்.

 அதனைவிட, 122 சிறுவர்கள் புறக்கணிக்கப்பட்டும், 14 சிறுவர்கள் கடத்தப்பட்டும், 6 சிறுவர்கள் நெருக்கடிகளுக்குள்ளாகியும், 40 சிறுவர்கள் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியும், 71 சிறுவர்கள் தனித்து வாழ்ந்தும்,  66 சிறுவர்கள் இளவயதுத் திருமணம் செய்தும், 22 சிறுவர்கள் குடும்பங்களின் பாரங்களை சுமந்தவாறும்,198 சிறுவர்கள் வேறு துன்புறுத்தல் நடவடிக்கைகளுக்குள்ளாகியும் உள்ளனர். 

  26 சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சித்தும், 12 பேர் தற்கொலை செய்தும் உள்ளனர். சிறுவர் பாலியல் சேஷ்டைகள், புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள், தனித்திருக்கும் சிறுவர்கள், இளவயது திருமணம், குடும்பங்களில் பாரத்தை சுமத்தல் ஆகியவற்றில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சிறுவர்கள் அதிகளவாக காணப்படுகின்றனர்' என்று சுட்டிக்காட்டினார்.   

'சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் யாழ். மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றது. இவர்களுக்குரிய மாற்று நடவடிக்கைகளை உரிய மாவட்ட, பிரதேச செயலகங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளூடாக  மேற்கொண்டு வருகின்றோம். என அவர் தெரிவித்தார். - See more at: