Breaking News

சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் நீடிப்பேன் - மகிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் தொடர்ந்தும் நீடிக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி பதவியை விட்டு விலகிய போதிலும் கட்சியின் தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.எந்தவிதமான கலங்களிலும் ஈடுபடாது அமைதியான முறையில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும்.ஜனாதிபதி மைத்திரிபாலவின் சகலவிதமான சாதக செயற்பாடுகளுக்கும் ஆதரவளிக்கப்படும்.

எனினும், நாட்டுக்கு விரோதமான செயற்பாடுகளை விமர்சனம் செய்யத் தயங்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரையாற்றிய போது அநேக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் சிந்தி அழுதனர் என தெரிவிக்கப்படுகிறது.