பிரான்ஸில் மசூதிகள் மீதும் தாக்குதல் (காணொலி)
பிரான்ஸில் 'சார்லி எப்தோ' இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, பிரான்சின் பல பகுதிகளில் பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளதாக பிரான்சில் நீதித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.
பாரிசுக்கு மேற்கே லெ மான்ஸ் பகுதியில் உள்ள மசூதி ஒன்று கையெறி குண்டுகளால் தாக்கப்பட்டது.பிரான்சில் இந்த சம்பவத்துக்கு பிறகு தங்கள் சமுதாயத்துக்கு எதிரான எதிர்தாக்குதல்கள் தொடுக்கப்படலாம் என்று அஞ்சுவதாக சில முஸ்லீம் பிரமுகர்கள் கூறியிருக்கின்றனர்.








