எனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது - சஜித் பிரேமதாச
மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் இணைந்து கொண்டதாக வெளிவந்த செய்தி மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தினமான இன்று, தேசிய ஊடகமான ரூபவாஹினி சஜித் பிரேமதாச மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.அரச ஊடகமொன்று இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டதன் ஊடாக தனது பெயர் களங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆளுந்தரப்பின் மிலேச்சத்தனமும், வங்குரோத்தும் மிக்க இதுபோன்ற செயற்பாடுகள்தான் நாட்டின் ஜனநாயகத்தை களங்கப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், இதனை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.








