வடபகுதி மக்கள் யாழ்தேவியைக் கோரவில்லை - டிலான் பெரேரா
வடக்கு வாழ் மக்கள் யாழ்தேவி ரயில் சேவையைத் தருமாறு கோரவில்லை அவர்கள் அரசியல் அதிகாரத்தை கோரியே நின்றதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரவித்துள்ளார்.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்தமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடப்பட்ட நிலையிலும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசு வெற்றிகரமாக முன்னெடுத்திருந்த போதும் மக்கள் அபிவிருத்தி திட்டங்களை விடவும் அரசியல் அதிகாரங்களையே விரும்பி நின்றனர். இதனாலையே மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








