இந்திய மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் முதல் தடவையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோடியக்கரை கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது மீனவர்களுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.இதேவேளை இலங்கையின் 6 மீனவர்கள் நேற்று இந்திய கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.








