Breaking News

மகேஸ்வரி நிதிய மணல் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்

மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வை  தற்காலிகமாக நிறுத்துமாறு பருத்தித்துறை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 


வடமராட்சி கிழக்கில் பாரிய மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ள ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியத்திற்கும் அதனை தடுக்க முனைந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் சட்டவிரோதமானக முறையில் ஈ.பி.டி.பியினர் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். அதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் தலத்திற்கு  சென்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்  மற்றும் உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ள ஈ.பி.டி.பியினருக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  மணல் அகழ்வை  தற்காலிகமாக நிறுத்துமாறு பருத்தித்துறை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதனை அடுத்து மணல் அகழும் பணியில் நிறுத்தி சென்றது ஈ.பி.டி.பி.