Breaking News

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் சுட்டுக் கொலை

ரஷ்யா ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த ரஷ்ய எதிர்கட்சியின் அரசியல்வாதியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சி தலைவரான போரிஸ் நெம்ஸ்ட்சோவ் போராட்டங்களை நடத்தியும், அரசினை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை புடின் ஆட்சிக்கு எதிராக பாரியளவிலான போராட்டம் நடத்த அவர் முடிவு செய்திருந்தார்.

நேற்றிரவு தலைநகர் மாஸ்கோ நகரில் மத்திய பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த இவர், இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ள நிலையில் ஜனாதிபதி புடின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவரின் எதிரிகள் சிலர் கூலிப்படையை வைத்து கொலை செய்திருக்கலாம் என்றும் தனிக்கட்டுப்பாட்டின் கீழ் இவரது மரணம் குறித்து விசாரணை செய்ய ரஷ்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.