மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் மைத்திரியுடன் பேச்சு - டேவிட் கமரோன்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு வலியுறுத்தவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரிட்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் இந்த விடயத்தில் ஊக்கப்படுத்தவுள்ளதாக டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த போது வடக்கில் தாம் சந்தித்த மக்களின் கஷ்டங்களை மறக்க முடியாத நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மாற்றம் ஏற்படவேண்டும் என டேவிட் கமரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே பேச்சுவார்த்தையையடுத்து இலங்கை- பிரித்தானியா ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகள் தொடர்பில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.