Breaking News

பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் - கேமரூன் பரபரப்பு பேட்டி (காணொளி இணைப்பு)


பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என டேவிட் கேமரூன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் அக்ஸ்போர்ஷைர்(Oxfordshire) நகரில் உள்ள தனது வீட்டின் சமையல் அறையில் இருந்தவாறு, நேற்று முன் தினம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு டேவிட் கேமரூன் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, மே மாதம் நடைபெற உள்ள பிரதமர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், 2020-யில் வரும் பிரதமர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட மாட்டேன்.

2020-யில் நடைபெறும் பிரதமர் தேர்தலில் தற்போதைய மேயரான போரிஸ் ஜான்சன்(Boris Johnson), மத்திய செயலாளர் தெரசா மே(Theresa May) அல்லது சான்சலர் ஜார்ஜ் ஆஸ்போர்ன்(George Osborne) ஆகியர்வர்கள் பிரதமராக தகுதி உடையவர்கள் என பேசியுள்ளார். தனது பிரதமர் பணிகள் குறித்து பேசிய அவர், மக்களுக்கான பணிகளில் பாதியை மட்டுமே செய்துள்ளதாகவும், மேலும் நிறைய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது கணவரின் பிரதமர் பணி குறித்து கேமரூனின் மனைவி சமந்தா கேமரூன்(Samantha Cameron) கூறுகையில், நாட்டை வழி நடத்தி செல்வதில் கேமரூன் மிகச் சிறந்த தலைவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இதற்கிடையே தோழாளர் கட்சியை சேர்ந்த தலைவர்கள், பிரதமராக இரண்டாவது முறையாக வெற்ற பெறாத நிலையில், மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என கேமரூன் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என விமர்சித்துள்ளனர்.