தென்னாபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் சென்றது நியூசிலாந்து!
நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் ஓக்லண்டில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
இதன்மூலம் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவ் அணி பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. போட்டி மழையால் பாதிக்கப்பட்டமையால் 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
மட்டுப்படுத்தப்பட்ட 43 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 281 ஓட்டங்களை பெற்றது. இந்த நிலையில், டக்வர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 43 ஓவர்களில் 298 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த எலியொட் 84 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.








