வடமாகாண சபை சுயமாக இயங்குகிறது -விக்னேஸ்வரன்
புதிய அரசாங்கத்தின் கீழ் வடமாகாண சபை சுயமாக இயங்குவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் வடமாகாண சபையினால் சுயமாக இயங்க முடியாத நிலைமை காணப்பட்டது.
ஆனால் கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் இந்த நிலைமையில் குறிப்பிடத்தக்க மற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை உரிய தரவுகளுடன் முன்வைக்கப்படும் கோரிக்கையின் அடிப்படையில், காணிகளை விடுவித்துக் கொள்ள முடியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.