அனல் மின்நிலையங்கள் இனி இல்லை - சம்பிக்க
நாட்டில், எதிர்வரும் காலங்களில் அனல் மின்நிலையங்கள் நிர்மாணிக்கப்படமாட்டாது என மின் சக்தித்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வாயு மூலம் செயல்படும் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கவே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் வாயு மூலம் மன்னார் குடாவில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நிலையம் அமைப்பது குறித்த தகவல்களை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடந்த வாரம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








