புலம்பெயர் தமிழர்களுக்கான மாநாட்டின் பின்னணியில் புலிகளின் தூண்டுதலே உள்ளது
புலம்பெயர் தமிழர்களுக்கான மாநாட்டை நடத்துவதன் பின்னணியில் புலிகளின் தூண்டுதலே உள்ளது. இந்த உண்மைகளை விரைவில் கண்டறிவோம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். மாநாட்டை தடுப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவு ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புலம்பெயர் தமிழர்களுக்கான மாநாட்டை நடத்தியே தீருவோம் என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டினை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் அனைவரும் புலிகள் அல்ல. இந்த நாட்டை விட்டு வெளியேறிய இல ங்கை மக்கள் அனைவரும் மீண்டும் இலங்கையில் மீண்டும் குடியேற வேண்டும் என்பதை எமது ஆட்சியில் இருந்தே தெரிவித்து வந்துள்ளோம். அதற்கான பல பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகள் எமது ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மக்கள் மட்டும் அல்லது இலங்கையில் இருந்து 1983ஆம் ஆண்டுகளில் வெளியேறிய சிங் கள் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களையும் மீண்டும் நாட்டுக்குள் வரவழைக்க வேண்டும்.
ஆனால் இந்த விடயத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமையே அதிகமாக உள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் பலர் இன்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். புலிகளுக்கான பண உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிய பலர் இன்னும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளனர். அவர்களை மீண்டும் இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.
எமது ஆட்சியின் போதும் புலிகளின் சர்வதேச அமைப்புகள் எம்முடன் தொடர்புகளை வைத்துக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் எமது அரசாங்கம் அவை எதற்கும் இணக்கம் தெரிவிக்காது பாதுகாப்பை பலப்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்தியது. ஆனால் இந்த அரசாங்கம் புலிகளின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர். சர்வதேச புலிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
லண்டன் பேச்சுவார் த்தையில் அரசாங்கம் என்ன பேசியது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன பேச்சுவார்த்தை நடத்தினர் என்ற உண்மை இன்னும் வெளிவரவில்லை. நாட்டுக்கு சாதகமான பேச்சுவார்த்தையாக இருந்திருந்தால் அங்கு பேசியதை இவர்கள் வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் இன்றுவரை உண்மை வெளிவரவில்லை. ஆகவே இந்த பேச்சுவார்தையின் பின்னணியில் புலிகளுடனான ஒப்பந்தங்கள் உள்ளன என்று நாம் சந்தேகப்படுவதில் தவறேதும் இல்லை.
மேலும் புலம்பெயர் அமைப்புகளை ஒன்றிணைத்து இலங்கையில் மாநாடு நடத்த அரசாங்கம் திட்டம் தீட்டுகின்றது. இது நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில் புலிகள் அமைப்புகளே அதிகமாக உள்ளன. சாதாரண மக்கள் அனைவரும் இன்றும் இலங்கையில் தான் உள்ளனர். யுத்த காலகட்டத்தில் நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களின் பின்புலம் சரியாக தெரியாது அவர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைத்து வருவது நல்லதல்ல.
ஆகவே அரசாங்கம் உடனடியாக இந்த முயற்சியை கைவிட வேண்டும். வெளிநாடுகளில் மாநாடுகள் நடப்பதை காரணம் காட்டி இலங்கையில் புலிகளுக்கான மாநாடுகளை நடத்துவது மீண்டும் நாட்டை பிரிவினையின் பாதையில் கொண்டு செல்வதாக அமைந்துவிடும். அதேபோல் எதிர்க்கட்சி என்ற ரீதியில் எமக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளன. நம் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். இந்த மாநாட்டின் பின்னணியில் புலிகளின் பலமான தூண்டுதல் உள்ளது.
எனவே இதன் பின்னணியில் யார் இயங்குகின்றனர் என்ற உண்மையை விரைவில் வெளியிடுவோம். அதேபோல் இந்த புலம்பெயர் தமிழர்களின் மாநாடு இலங்கையில் நடத்தாது தடுப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவா ர்த்தை நடத்தவுள்ளோம். அவரது அனுமதி இந்த விடயத்தில் இல்லையென நாம் நம்புகின்றோம். எனவே விரைவில் பல உண்மைகள் வெளிவரும் எனக் குறிப்பிட் டார்.








