மஹிந்தவுக்கு கட்சியில் இடமில்லாத போது அவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் பயனில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கட்சியில் இடமி ல்லாத போது அவருடன் அரசி யல் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. மஹிந்தவுடன் அரசியல் பேச்சுவா ர்த்தை நடத்த எந்தத் திட்டமும் எமக்கு இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஆனால் இன்றும் மஹிந்த எனது நல்ல நண்பர் எனவும் அவர் குறிப்பிட்டார்.மஹிந்த ராஜபக் ஷவுடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ள நிலையில் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கட்சியில் பிரதமர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று நான் குறிப்பிட்டது இன்று பொய்யாக மாறிவிட்டதா? நான் கூறியது பொய் என்றால் இப்போதைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்த ராஜபக் ஷ பலமான நிலையில் இருந்திருக்க வேண்டும். அவரே அடுத்த பிரதமர் வேட்பாளர் என ஜனாதிபதி தெரிவித்திருப்பார்.
ஆனால் நான் அன்று தெரிவித்த விடயத்தையே மறுநாள் ஜனாதிபதி ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் கட்சி மட்டக் கூட்டங்களிலும் அதே கருத்தையே அவர் தெரிவித்துள்ளார். ஆகவே நான் கூறிய விடயங்கள் உண்மையான வை என்பதை இப்போது அனைவராலும் விளங்கிக்கொள்ள முடியும்.
அதேபோல் கட்சி இன்று ஜனநாயகத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. கட்சிக்குள் பலர் ஜனநாயக பாதையி னை தெரிவு செய்து அந்தப் பாதை யில் எம்முடன் கைகோர்த்து நடக்கின்றனர். ஆனால் இன்னும் சிலர் கட்சிக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி சர்வாதிகாரத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.
இப்போது இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அப்போது இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்ல. அந்தக் கட்சியில் சர்வாதிகாரப் பாதை மட்டுமே திறந்திருந்தது. அந்தப் பாதையில் இன்று பயணிக்க முடியாது. கட்சியின் தலைவர் பயணிக்கும் பாதையில் தொண் டர்கள் பயணிக்க வேண்டும். கட்சிக்குள் இரண்டு பயணத்தை மேற்கொள்ள முயன்றால் அது கடினமானது. ஆகவே இப்போது இருக்கும் நிலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.
கேள்வி:- முன்னாள் ஜனாதிபதியை நீங்கள் இன்று (நேற்று) காலை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளதே?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இன்று (நேற்று) காலை நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித அரசியல் நோக்கங்களும் இல்லை. இன்றும் மஹிந்த எனது நல்ல நண்பராகவே உள்ளார். மஹிந்த மட்டும் அல்ல அவரது குடும்ப உறுப்பினர்களுடனும் நான் இன்றும் நெருங்கிய பழக்கத்தை வைத்துள்ளேன். ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் சாதரணமாக பல விடயங்களை கதைத் தேன். அவரது உடல்நிலை மற்றும் உறவினர்கள் பற்றி விசாரித்தேன். அதைத்தவிர வேறு எந்த அரசியல் கலந்துரையாடலும் நடை பெற வில்லை. அரசியலில் சேர்த்துக் கொள்ள விரும்பாத ஒருவருடன் அரசியல் பேசுவதில் அர்த்தம் இல்லை.








