Breaking News

பந்துலவிடம் 2 பில்லியன் நட்டஈடு கோரி ரவி சட்டக் கடிதம்

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவிடம் 2 பில்லியன் நட்டஈடு கோரி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சட்டக் கடிதம் அனுப்பியுள்ளார். 

கடந்த 18ம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பிலேயே ரவி கருணாநாயக்க இந்த சட்டக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். 

குறித்த தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பந்துல குணவர்த்தன, ராஜ் ராஜரட்ணத்திற்குச் சொந்தமான 3 மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கிக்கு அறிவிக்காமல் ரவி கருணாநாயக்க தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுக் கொண்டதாக கருத்து வெளியிட்டிருந்தார். 

இந்த கருத்தானது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் தனது அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் சட்டத்தரணி ஊடாக நட்டஈடு கோரி சட்டக் கடிதம் அனுப்பியுள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.