Breaking News

சர்­வ­தேச கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெறுவதாக சங்கா அறிவிப்பு

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து ஓய்வு பெற­வுள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கார தெரி­வித்­துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே குமார் சங்­கக்­கார மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், நான் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற­வுள்ளேன். இந்­திய அணி­யு­ட­னான 2 ஆவது டெஸ்ட் போட்­டி­யுடன் நான் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து ஓய்வுபெறவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.