மகிந்தவைப் பிரதமராக்குவதே தனது நோக்கமாம்! என்கிறார் பசில்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, நாட்டின் அடுத்த பிரதமராக்குவதற்கு தான் முழுஅளவிலான பரப்புரைகளில் ஈடுபடப் போவதாக, இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,
“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை. மகிந்த ராஜபக்சவை அடுத்த பிரதமராக்குவதிலேயே எனது முழுக் கவனமும் இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய பசில் ராஜபக்ச, தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவின் மீரிஹான வீட்டில் நீண்ட நேரம் அவருடன் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.