Breaking News

திடீர் சுற்றிவளைப்புக்களில் 40 பேர் கைது! கிளிநொச்சி பொலிஸார் தெரிவிப்பு

கிளி­நொச்சி மாவட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட திடீர் சுற்றிவளைப்­புக்­களின் போது 40 சந்­தேக நபர்கள் கைதுசெய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

யாழ். மாவட்ட நீதி­மன்ற நீதி­ப­தி­யாக எம்.இளஞ்­செ­ழியன் நிய­மிக்­கப்­பட்­டதன் பின்னர் குற்றச்செயல்­களைத் தடுப்­ப­தற்கு ஒரு மாத­கா­லத்­திற்குள் உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பொலி­ஸாரைப் பணித்­தி­ருந்தார். அத்­துடன், பார­பட்­ச­மின்றி குற்­ற­வா­ளி­க­-ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இத­னை­ய­டுத்தே, கிளி­நொச்சி மாவட்­டத்தில் விசேட தேடுதல் நட­வ­டிக்­கை­களை பொலிஸார் முன்­னெ­டுத்­தி­ருந்­த-னர். இதன்­போது சட்­ட­வி­ரோத செயற்­பா-­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் எனச் சந்­தே­கிக்­கப்­படும் 40 பேரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவ-தாக கிளிநொச்சி மாவட்ட பொலி-ஸார் தெரிவித்தனர்.