Breaking News

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு புதிய அரசியலமைப்புத் தேவை – சம்பந்தன்

தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பே தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தி ஹிந்து அங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எல்லோருமே புதிய அரசியலமைப்புத் தேவை என்கின்றனர். சிங்களத் தலைமைகள் கூட புதிய அரசியலமைப்பையே கோருகின்றன.புதிய அரசியலமைப்புத் தேவை என நான் கோருவதற்கு அதில் பல விடயங்கள் இருக்கின்றன.

1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் காலம் முடிந்து விட்டதாக நாட்டின் ஒரு கருத்து உள்ளது. புதிய அரசியலமைப்பு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக மட்டுமன்றி, தேர்தல் முறை சீர்திருத்தம், மனித உரிமைகள், ஊழல், தகவல் உரிமை உள்ளிட்ட ஏனைய விவகாரங்களுக்கும் தீர்வு காண்பதாக அமைய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.