Breaking News

தேர்தலின் பின் ஐ.தே.மு.வுடன் கூட்டமைப்பு இணையும் சாத்தியம்! எதிர்வு கூறுகிறார் சோபித தேரர்

அர­சியல் ரீதி­யாக பொது இணக்­க­ப்பாட்­டிற்கு வர­மு­டி­யு­மானால் பாரா­ளு­மன்ற தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் ஒன்றை நிறு­வு­வ­தற்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இணைந்து கொள்ளும் சாத்தியம் உள்ளது 


என நீதி­யான சமூ­கத்­திற்­கான மக்கள் அமைப்பின் தலைவர் மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார்.

அதே­போன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் வரும் காலங்­களில் பொது இணக்­கப்­பாட்டின் கீழ் தேசிய அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

தேர்­தலின் பின்னர் மக்­களின் எமது ஒப்­பந்­ததை மீறி அர­சினால் செயற்­பட முடி­யாது. அதனை மீறி ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்கம் செயற்­ப­டு­மாயின் மக்­க­ளுடன் வீதியில் இறங்­குவோம். மக்­க­ளு­டைய அர­சாங்­கமே அடுத்து நிறு­வப்­ப­டுமே ஒழிய தனி கட்­சி­யொன்றின் ஆட்­சி­யல்ல என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பில் புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் பிர­சாரக் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்­ப­டு­கையில்,

ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­ப­டுத்­தப்­பட்ட புரட்­சி­க­ர­மான வெற்­றிக்கு தமிழ், முஸ்லிம் மக்­களும் கட்­சி­களும் பெரு­ம­ளவில் பங்­காற்­றின. அதனை எம்மால் மறந்­து­விட்டு செயற்­பட முடி­யாது. ஆகவே அவ்­வா­றா­ன­தொரு போக்­கையே இம்­முறை பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் நாம் எதிர்ப்­பார்க்­கின்றோம். பாரா­ளு­மன்ற தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தனி­யா­கவே கள­மி­றங்­கு­கின்­றது.

இருந்­த­போ­திலும் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு கடந்த பாரா­ளு­மன்­றத்தின் போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினால் இணைந்து செயற்­பட முடி­யு­மென்றால் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் தேசிய அர­சாங்கம் அமைக்க தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு நிச்­சி­ய­மாக முன்­வந்தே தீரும். அந்த நம்­பிக்கை எமக்கு உள்­ளது.

நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. இதற்­கான வேலைத்­திட்­டங்­களை அடுத்த பாரா­ளு­மன்ற ஆட்­சியின் போது நாம் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். அது போன்று நாட்டில் அபி­வி­ருத்­தி­யையும் நாம் அவ­தா­னிக்க வேண்­டி­யுள்­ளது. ஆகவே ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஆட்­சியின் கீழ் பல்­வேறு மாற்­றங்­களை நாம் செய்ய தயா­ரா­கவே உள்ளோம்.

அத்­தோடு அர­சியல் ரீதி­யாக பொது இணக்­கப்­பாடு என்ற விடயம் சாத்­தி­ய­மா­கு­மானால் நிச்­சி­ய­மாக வரும் காலங்­களில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தேசிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும்.

ஆட்சி மாற்றம்

ஊழல் மோச­டிகள், சர்­வா­தி­கார ஆட்சி மற்றும் அர­சி­ய­ல­மைப்பின் 18 ஆவது திருத்­தச்­சட்டம் உள்­ளிட்­ட­வையே ஜன­வரி 8 ஆம் திகதி புரட்­சிக்கு பெரும் பங்­காற்­றி­ன. நீண்ட கால­மாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்­துக்­கட்­டு­வ­தற்கு நாம் போராட்டம் நடத்­தி­ய­போ­திலும் எம்மால் எத­னையும் வெற்­றிக்­கொள்ள முடி­ய­வில்லை. இந்­நி­லையில் நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது நாட்டில் நல்­லாட்­சியை நிறு­வு­வ­தற்­கா­கவே நாம் எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ராக ஒரு­வரை கள­மி­றக்க திட்­ட­மிட்டோம்.

இதன்­பி­ர­காரம் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றக்கி தேர்­தலில் வெற்­றிக்­கொண்டு அவரை ஜனா­தி­பதி கதி­ரையில் அம­ர­வைப்­ப­தற்கு எம்மால் முடிந்­தது. இந்த வெற்றி ஒரு தனிக்­கட்­சியின் வெற்­றி­யல்ல. நாட்டு மக்­க­ளுக்கு கிடைக்க பெற்ற வெற்­றி­யாகும். இந்த வெற்­றியை எவ­ராலும் சொந்தம் கொண்­டாட முடி­யாது.

இதன்­பி­ர­காரம் ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­ப­டுத்­திய ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தை குறைக்கும் வகையில் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை எம்மால் நிறை­வேற்ற முடிந்­தது. அதே­போன்று சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறுவும் செயற்­பாட்­டிற்கும் உர­மூட்ட முடிந்­தது.

இருந்­த­போ­திலும் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள எதிர்க்­கட்­சிகள் காலை­வார முற்­பட்­டன. எனினும் எமது போராட்­டத்தை அடுத்து குறித்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்­நி­லையில் தற்­போது நாட்டின் அனைத்து துறைகளும் சுயா­தீ­ன­மாக இயங்க கூடிய சூழல் உரு­வா­கி­யுள்­ளது. இம்­முறை தேர்தல் பிர­சா­ரங்கள் அமை­தி­யான முறையில் நடத்­தப்­ப­டு­கின்­றது. மோதல்கள் கிடை­யாது. இது பாரிய மாற்றம். எவ­ராலும் நினைத்து பாரக்க முடி­யாத அள­விற்கு பதா­கை­க­ளினால் அலங்­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கலா­சாரம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய மாற்­றத்தை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது. இத்­த­கைய நல்­லாட்­சிக்­கா­கவே நாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஆத­ரவு நல்­கினோம். இந்­நி­லையில் குறித்த நல்­லாட்சியை முன்­ந­கர்த்த கூடிய பலம் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு மாத்­தி­ரமே உள்­ளது. இதனை தவிர்ந்த மாற்று வழி எமக்கு தெரி­யாது. ஆகவே 110 அமைப்­புக்­க­ளுடன் கைச்­சாத்­திட்ட ஒப்­பந்­த­தி­னூ­டாக அடுத்த பாரா­ளு­மன்­றத்தை நாட்டில் நல்­லாட்­சி­யையும் ஜன­நா­ய­கத்­தையும் ஏற்­ப­டுத்த போரா­டுவோம். இது தொடர்பில் நாம் அவ­தா­னத்­து­டனும் அழுத்தம் பிர­யோ­கிக்கும் சக்­தி­யா­கவும் நாம் திக­ழுவோம்.

எனவே ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­ப­டுத்­தப்­பட்ட புரட்­சி­யி­னூ­டாக சிறுப்­பான்மை அர­சாங்கம் என்ற வகையில் நிறை­வேற்­று­வ­தற்கு கடி­ன­மாக இருந்த பல்­வேறு நல்­லாட்சி திட்­டங்­களை நாம் அடுத்த ஐக்­கிய தேசியக் முன்­ன­ணியின் ஆட்­சியின் கீழ் நிறை­வேற்­று­வ­தற்கு தயா­ராக உள்ளோம். இதற்­க­மை­யவே நாம் ஒப்­பந்தம் கைச்­சாத்­திட்டோம்.

எனினும் மக்­களின் ஆணைக்கு மதிப்­ப­ளித்து செயற்­பட கூடி­ய­வர்கள் எந்த சந்­தர்ப்­பத்­திலும் மக்­க­ளுக்கு துரோகம் செய்ய மாட்­டார்கள். ஆகவே இந்த நம்­பிக்­கையின் பிர­கா­ரமே நாம் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு ஆத­ரவு நல்­கினோம். எனவே அடுத்த பாரா­ளு­மன்­றத்தில் மலரவுள்ள ஆட்­சியும் பொது இணக்­கப்­பாட்டின் கீழ் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆட்­சி­யாகும். இந்த ஆட்­சிக்கும் எந்த தனிக்­கட்­சியும் சொந்தம் கொண்­டாட முடி­யாது.

கோரிக்கை

அதே­போன்று இம்­முறை தேர்­த­லிலும் பழைய திரு­டர்­களின் முகங்கள் கண்­க­ளுக்கு புலப்­ப­டு­கின்­றன. போதைப்­பொருள் வர்த்­த­கர்கள், மோச­டிக்­கார்கள்,கொள்­ளைக்­கார்­க­ளுக்கு தேர்­தலின் போது வேட்­பு­மனு வழங்க மாட்டோம் என்று மார்ச் கொள்கை பிர­க­ட­ணத்­திற்கு அரசியல்கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட போதிலும், இந்த தேர்தலிலும் திருடர்களின் முகங்களை நாம் அவதானிக்கின்றோம்.

இந்நிலையில் தற்போது மக்களுக்கு அறிய சந்தர்ப்பம் கிடைக்கபெற்றுள்ளது. இந்த தேர்தலில் மக்களின் பணங்களை கொள்ளையிட கூடியவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யகூடாது. பாராளுமன்றம் என்பது சட்டவாக்க மன்றமாகும். போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையோர் பாராளுமன்ற தெரிவானால் அவர்களுக்கு எவ்வாறு சட்டவாக்கம் தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்பட முடியும். அவர்களின் தொழிலுக்கு சாதகமான முறையில்மாத்திரமே சட்டங்களை நிறைவேற்ற முடியும்.

ஆகவே இது தொடர்பில் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார்.