13ஐ அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஜெயலலிதா
இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின்படி, அங்குள்ள தமிழர்கள் அரசியல் சுய நிர்ணய உரிமையைப் பெற வேண்டும் என்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
தேசிய கைத்தறி தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று வெள்ளிக்கிழமை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதன்போது மீனவர் பிரச்னை, கச்சத்தீவு விவகாரம், இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இந்தப் பிராந்தியத்தில் வலிமையான நாடான இந்தியா, இலங்கைத் தமிழருக்கு ஆதரவான உறுதியான நிலையை எடுக்க வேண்டும். இலங்கையில் இனப்படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இந்தியா போராட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த பிறகு, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 1974, 1976-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்வதுடன், கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினா