Breaking News

தேர்தலை முன்னிட்டு அமமெரிக்கா பயண எச்சரிக்கை

இலங்கையில் இருக்கும் அமமெரிக்கர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இலங்கையில் இம்மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் வன்முறைகள் வெடிக்கக் கூடுமென்ற அடிப்படையில் அமமெரிக்க அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஊடகச் செய்திகளை கவனிப்பதுடன் மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென அமமெரிக்க அரசாங்கம் தமது நாட்டுப் பிரஜைகளிடம் கோரியுள்ளது. இதேவேளை சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்வதற்கும் வாழ்வதற்கும் இலங்கை சிறந்த நாடாக விளங்குவதாகவும் அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுதவிர இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு அவுஸ்திரேலிய அரசாங்கமும் ஏற்கனவே தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.