சம்பூர் மக்களுக்கு காணி பத்திரங்களை வழங்குவதற்கு நாளை வருகிறார் ஜனாதிபதி
சம்பூர் மக்களுக்கு நாளை சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் காணிப் பத்திரங்கள் கையளிக்கப் படவுள்ளன. இவ் வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இது பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது;
சம்பூர் மக்களுக்கு உத்தியோகபூர்வமாக காணிப் பத்திரங்களை கையளித்து மீள்குடியேற்றத்தை ஆரம்பித்து வைக்க வருகை தரவிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
சனிக்கிழமை மாலை சம்பூருக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோ ரும் வருகை தரவுள்ளனர்.
சம்பூர் பத்திரகாளியம்மன் ஆலய முன்ற லில் சம்பிரதாயபூர்வமாக சனிக்கிழமை மாலை சம்பூர் மக்களுக்கான காணி உறுதிப்பத்திர கையளிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது. 2006ஆம் ஆண்டு சம்பூர் மக்கள் குடி பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த நிலையில் சம்பூரில் உள்ள 818 ஏக்கர் காணிகளும் முதலீட்டு வலயத்துக்கென வர்த்தமானி பிரசுரத்தின் மூலம் சுவீகரிக்கப்பட்டதுடன் இன்னுமொரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் கேற்வே என்ற பல்தேசியக் கம்பனிக்கு பொருளாதார வர்த்தக வலய அபிவிருத்திக்கென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2012ஆம் ஆண்டு வர்த்தமானி பிரகடனமொன்றை செய்திருந் தார். இதற்கு எதிராக சம்பூர் மக்கள் ஏழு பேரினால் உயர் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
புதிய ஆட்சி மாற்றம் காரணமாக, முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவி னால் செய்யப்பட்ட வர்த்தமானிப் பிரகடனங்களை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரத்து செய்தார். இதற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு செல்லுபடியற்றது என கடந்த ஆடி மாதம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து சம்பூர் மக்களின் மீள் குடியேற்றம் உறுதி செய்யப்பட்டது.
பொதுத் தேர்தல் முடிவுகளைத் தொட ர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை வர் இரா. சம்பந்தனினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தொடர்ந்து சம்பூர் மீள்குடியேற்றத்தை உத்தியோகபூர்வமாக நாளை சனிக்கிழமை ஆரம்பித்து வைப்பதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பூருக்கு வருகை தரவுள்ளார்.
இந்த வைபவத்துக்கான பூர்வாங்க ஏற் பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் மற் றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என். புஷ்பகுமார ஆகியோர் மேற் கொண்டு வருகின்றனர். இதேவேளை சம்பூரில் உள்ள கடற்படை உயர் பாது காப்பு வலயத்திற்குட்பட்ட 217 ஏக்கர் நில மும் விரைவில் மக்களிடம் கையளிக்கப் படுமென எதிர்பார்க்கப்படுகிறது.








