ஐ.நா.விசாரணை அறிக்கை குறித்து பீரிஸ் பொய்யான தகவல்களை வெளியிடுகிறார்
சிந்துள்ளதாக கூறப்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பொய்யான தகவல்களை வெளியிடுவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
அவ்வாறு எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் அதனை பொது மக்களுக்கு வெளியிடவேண்டியது ஜீ.எல். பீரிஸின் கடமையாகும். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் எவ்வாறு இந்த அறிக்கையை பெற்றார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவரிடம் இந்த அறிக்கை இருக்குமானால் அவர் அதனை உடனடியாக ஊடகங்களுக்கு வெளியிடவேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லை. அதனால் தான் அதனை வதந்தி என்கிறோம். ஜீ.எல்.பீரிஸ் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
மேலும் தேர்தல் காலத்தில் மக்களை திசை திருப்பும் வகையில் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாமென ஜீ.எல்.பீரிஸிடம் நாங்கள் கோரிக்கை விடுகிறோம் என்றார்.கடந்த சனிக்கிழமை கருத்து வெளியிட்டிருந்த ஜீ.எல். பீரிஸ் புதிய அரசாங்கத்தின் உள்ளக விசாரணையானது சர்வதேச தலையீட்டைக் கொண்டுள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.கசியவிடப்பட்டுள்ள ஐ.நா.வின் அறிக்கையானது இந்த சர்வதேச தொடர்பை கோடிட்டுக்காட்டுவதாகவும் அவர் கூறியிருந்தார். அத்துடன் இந்த விடயத்தில் வடமாகாண சபையும் சம்பந்தப்படுவதாக ஜீ.எல். பீரிஸ் கூறியிருந்தார்.
”இந்த செயற்பாட்டில் எவ்வாறு வடமாகாணசபை சம்பந்தப்படமுடியும்? அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதாவது வடமாகாணசபையானது யுத்தத்தின் போது யுத்தக் குற்றம் இடம் பெற்றதாகவும் இனப்படுகொலை நடைபெற்றதாகவும் கூறியுள்ளது. அவ்வாறான ஒரு சபையிடம் உள்ளக விசாரணை செயற்பாட்டில் பங்கெடுக்க வைக்க முடியுமா? என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.எவ்வாறெனினும் யுத்தம் சம்பந்தமானமுழுமையான செயற்பாட்டில் தமிழ்புலம்பெயர் அமைப்புக்களும், தமிழ்தேசி யக்கூட்டமைப்பும் சர்வதேச முகவர் நிறு வனங்களும் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.