Breaking News

மஹிந்த எதிர்த்தரப்பு கூட்டமைப்பு வேட்பாளர்கள் பலர் தோல்வி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக செயற்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில முக்கிய வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

மஹிந்த தரப்பினர் இவர்களை அப்பச்சி மலா குழு என அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. உத்தியோகப் பற்றற்ற அடிப்படையில் பல முக்கிய உறுப்பினர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட லக்ஸ்மன் யாபா, களுத்துறையில் போட்டியிட்ட மஹிந்த சமரசிங்க, குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட சாந்த பண்டார, மாத்தளையில் நந்திமித்ர ஏக்கநாயக்க, காலியில் பியசேன கமகே மற்றும் மொனராகலில் விஜித் விஜயமுனி சொய்சா, ஜகத் புஸ்பகுமார ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

பிரபல அமைச்சரான எஸ்.பி. திஸாநாயக்க தோல்வியைத் தழுவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், மஹிந்த அமரவீர மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகிய மஹிந்தவிற்கு எதிராக செயற்பட்டவர்களாக குற்றம் சுமத்தப்பட்ட இருவரும் வெற்றியீட்டியுள்ளனர்.

ராஜபக்சக்களின் அழுத்தம் காரணமாக நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த சிலருக்கு தேசியப் பட்டியல் ஊடாக சந்தர்ப்பம் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.