Breaking News

சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்க கோரும் பிரதான அரசியல் கட்சிகள்

ஐக்­கிய தேசிய க்கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர சாங்கம் அமைப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இணங்­கி­யுள்ள நிலையில் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சி தலைவர் யார் என்றும் எக்­கட்சி எதிர்க்­கட்சி என்றும் கேள்­விகள் எழுந்­துள்­ளன.

அந்­த­வ­கையில் தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றா­வது பெரும் அர­சியல் சக்­தி­யாக உரு­வெ­டுத்­தி­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே எதிர்க்­கட்­சி­யா­கவும் அதன் தலைவர் இரா. சம்­மந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் வர­வேண்டும் என கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி 106 ஆச­னங்­களை பெற்று வெற்­றி­யீட்­டி­யது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­களை பெற்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மூன்­றா­வது சக்­தி­யாக 16 ஆச­னங்­களை பெற்­றது.

இந்­நி­லையில் தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு நேற்று அங்­கீ­காரம் வழங்­கி­யது.

அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைப்­பது தொடர்பில் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை ஒன்றை கைச்­சாத்­தி­டு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடி­வெ­டுக்க சுதந்­திரக் கட்­சியின் சார்பில் விசேட குழு ஒன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணியில் எதிர்க்­கட்­சி­யாக வரப்­போ­வது எந்தக் கட்சி என்­பதே கேள்­வி­யாக எழுந்­துள்­ளது. தற்­போ­தைய அர­சியல் கட்­ட­மைப்பில் பிர­தான இரண்டு கட்­சி­களும் கூட்டு சேர்ந்து அர­சாங்கம் அமைத்தால் மூன்­றா­வது சக்­தி­யாக உள்ள கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யாக வர­வேண்டும் என்­பதும் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­மந்­தனே எதிர்க்­கட்சித் தலை­வ­ராக வர­வேண்டும் என்­பதும் நிய­தி­யாகும்.

ஆனால் தற்­போது நிலையில் தேசிய அர­சாங்க எண்­ணக்­க­ருவை நிரா­க­ரித்­துள்ள மஹிந்த தரப்­பினர் சுயா­தீ­ன­மாக சென்று தாங்கள் தனித்து பாரா­ளு­மன்­றத்தில் இயங்­கப்­போ­வ­தாக தேர்தல் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்தால் அவர்கள் எதிர்க்­கட்சி அதந்ஸ்தை கோரலாம்.

ஆனால் அதற்கு அந்தக் குழுவில் கூட்­ட­மைப்பு எம்.பி. க்களை அதி­க­மான எண்ணிக்கையில் எம்.பி. க்கள் இருக்கவேண்டும். இந.நிலையில் இன்று அல்லது நாளை இடம்பெறப்போகும் நிலைமைகளை பார்த்து யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதனை தீர்மானித்துவிடலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.