தமிழ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க கூடாது - ஹெல உறுமய
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய புலி சந்தேகநபர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது என ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இந்த செய்தியை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
புலி உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுப்பது அநீதமானது என அவ்வமைப்பின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவத்தள்ளார்.
தற்பொழுது சிறையிலுள்ள புலி சிறைக் கைதிகள் விடயத்தில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது சட்டமா அதிபரின் பொறுப்பாகும். அத்துடன், இது நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்புமாகும்.
அனைவருக்கும் சட்டமும் உரிமையும் ஒழுங்காக கிடைக்கச் செய்ய வேண்டும். அவ்வாறன்றி, குழுக்களினதும், அரசியல் பிரிவினைவாதிகளினதும் கோரிக்கைகளை நிறைவு செய்ய முற்படுவதை அங்கீகரிக்க முடியாது எனவும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.








