Breaking News

கூட்டமைப்புடன் மட்டும் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாது - பிரதமருக்கு சங்கரி கடிதம்

கூட்­ட­மைப்­புடன் மட்டும் பேசி இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாது. அமைச்சர் ராஜித சேனாரத்­னவின் முடியும் என்ற கூற்று பகல் கனவே என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன்  பேச்சு நடாத்தி நிரந்­தர அர­சியல் தீர்வு காணத் ­தயார் என்ற அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூற்று வெறும் பகல் கனவே. நல்­லாட்சி மாற்­றத்தின் போது உத­வி­ய­வர்­க­ளுடன் அர­சியல் தீர்­விலும் ஒன்­றாக பேசி தீர்வு காண்­பது இல­கு­வான காரியம். நீண்­ட­கால அர­சியல் பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்த தீர்­மா­னித்­துள்ளோம் என அமைச்சர் கூறி­யுள்ளார்.

அர­சியல் பேசு­கின்­ற­வர்கள் ஓர­ள­வுக்­கேனும் நாட்டின் சரித்­தி­ரத்­தையும், மாற்றுக் கட்­சி­களின் பல்­வேறு நிலைப்­பா­டு­களை சரி­யாக தெரிந்­தி­ராமல் அர­சியல் செய்ய முடி­யாது.

முத­லா­வ­தாக நல்­லாட்சி மாற்­றத்தின் போது தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியே முதன்­மு­த­லாக தனது ஆத­ர­வினை தெரிவித்­தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இரண்டு வாரங்­களின் பின்பே தமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யது. அவர்கள் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பல­வித தீர்­வு­களை முன் வைத்­தது என்­பது மட்­டு­மல்ல தென்­னா­பி­ரிக்கா போன்ற வேறு நாடு­களின் அர­சியல் சாச­னங்­க­ளையும் ஆராய்­கின்­றனர். 

வேறு பிரச்­சினை­களை கிளப்­பக்­கூ­டிய மாற்றுக் கட்­சி­களால் நிரா­க­ரிக்­கப்­படும் எனத் தெரிந்தும் வேறு ஆலோ­ச­னை­களை முன்­வைத்து வரு­கின்­றனர். ஆகவே ராஜித சேனா­ரத்ன சொல்­வதை அவர்கள் கேட்­கப்­போ­வ­தில்லை. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு முன்­வைக்­கின்ற தீர்­வினை ராஜித சேனா­ரத்­னவும் ஏற்கப் போவ­தில்லை. முக்­கி­ய­மான விடயம் பல்­வேறு கட்­சி­களின் அனு­ச­ர­ணை­யின்றி எந்தத் தீர்­வையும் எட்­ட­மு­டி­யாது. 

தமிழர் விடு­தலைக் கூட்­டணி இந்­திய அர­சியல் சாச­னத்­தை­யொத்த முறையை வலி­யு­றுத்தி வரு­வ­தோடு கடந்த பத்து ஆண்டு கால­மாக அது சம்­பந்­த­மாக பல்­வேறு தலை­மை­க­ளு­டனும், நாட்டின் பல்­வேறு கட்­சி­க­ளு­டனும் தாங்கள் தங்கள் கட்சி உட்­பட கலந்­து­ரை­யாடி வந்­துள்­ளது. இதே நிலைப்­பாட்டை தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­வதும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியே.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் புது அர­சியல் சாச­னத்தைத் தேடி தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு பல தடவை விஜயம் செய்­தி­ருக்­கின்­றனர். அதன் விளை­வாக இந்­திய அரசின் வெறுப்­பையும் ஓர­ள­வுக்கு சம்­பா­தித்துக் கொண்­டனர். ஆகவே குட்­டையை மேலும் குழப்­பாமல் எல்லா மக்­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகையில் ஒரு தீர்வை தேடிப்­பி­டிப்­பதை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் பேசி தீர்வு காணலாம் என நினைப்­பதோ அதை மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்கள் என்று எண்­ணு­வதோ பொருந்­தாத விட­ய­மாகும். 

ஆனால் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் ஆலோ­ச­னையை நாட்டின் பல்­வேறு இன மக்­களும், தலை­வர்­களும் ஏற்­கக்­கூ­டிய அல்­லது ஏற்க வைக்­கக்­கூ­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. குறிப்­பாக த.தே.கூ.வின் இரா.சம்­பந்தனும் இந்­திய முறை­யி­லான தீர்­வினை ஏற்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கி­ற­தென்று பகி­ரங்­க­மாக தொிவித்­துள்ளார். 

எமது மேல­தி­க­மான ஆலோ­சனை தென்­னா­பி­ரிக்­கவின் பல்­வேறு உரி­மை­க­ளையும் உள்­ள­டக்­கிய சட்­டக்­கோர்­வையை எமது அர­சியல் சாச­னத்­தோடு இணைப்­பது மிகப் பொருத்­த­மாக இருப்­பது மட்­டு­மல்ல. அனே­கரால் ஏற்­கக்­கூ­டி­ய­தா­கவும் இருக்கும். ஆகவே புதுப்­புது பிரச்­சினை­களை கிளப்பி பிரச்­சி னை­க­ளுக்­கு­ரிய தீர்வை தூரத்­துக்கு எடுத்துச் செல்­லாமல் புத்தி சாது­ரி­ய­மாக தலை­வர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்­பதை சுட்­டிக்­காட்­டு­கிறேன். 

இதில் முக்­கிய விடயம் யாதெனில் மிகப் பெரிய­ளவில் தற்­பெ­ரு­மை­யுடன் 18 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் இயங்கி வந்த ஜன­நா­யக கட்­சி­யா­கிய தமிழர் விடு­தலைக் கூட்­டணி தனக்­கி­ருந்த பெரு­மை­மிக்க பழைய இடத்தை மீளப்­பெ­று­கின்ற தகு­தியை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு இழந்து நிற்­கி­றது. ஏனெனில் மிக மோச­மான முறையில் நாட்டில் நில­விய ஜன­நா­யக பாரம்­ப­ரி­யத்தை த.தே.கூ. சீர­ழித்­துள்­ள­மை­யா­லேயே.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் கிடைத்த வெற்றியையே அவர்கள் இன்றும் சுமந்து நிற்கின்றனர். ஆனால் இந்த வெற்றியைப் பற்றி அதில் ஏற்பட்ட மோசடிகள் பற்றி அமைச்சர் ராஜித சேனாரத்ன அறியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும். ஆனால் இந்த உண்மையை முழு நாடு உட்பட சர்வதேச சமூகமும் அறிந்திருக்கிறது. ஆகவே ராஜித சேனாரத்ன ஆலோசனை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.