மாகாண சபையைப் புறக்கணித்து, வடக்கில் மத்திய அரசு ஆதிக்கம்
-வட மாகாண சபையில் சுட்டிக்காட்டி கண்டனம்-
வட மாகாண சபையை தொடர்ந்தும் புறக்கணித்து வடக்கி;ல் அனைத்து விடையங்களிலும் மத்திய அரசு மூக்கை நுழைப்பதாக வட மாகண சபையில் நேற்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அபிவிருத்திப் பணிகள் உட்பட அனைத்து விடயங்களிலும் மத்திய அரசு தலையிட்டு ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக வட மாகாண சபை நேற்றைய அமர்வில் முதலமைச்சர் மற்றும் சபை உறுப்பினர்கள் பலர் சுட்டிக்காட்டி விசனம் வெளியிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகத தலைமையிலான தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஊடாக வடக்கின் 5 மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பாக தேவை மதிப்பீட்டுக் கருத்தரங்கு கடந்த மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.இந்த மதிப்பீட்டுக் கலந்துரையாடலில் வட மாகாண சபை உறுப்பினர்களோ வடக்கில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ அழைக்கப்படவில்லை.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தவராசா நேற்று சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார்.இந்தப் பிரேரணை மீது இடம்பெற்ற விவாதத்தில் இந்தச் செயற்பாட்டைச் சுட்டிக்காட்டி நபை உறுப்பினர்கள் பலரும் கடும் கண்டனம் வெளியிட்டனர்.இதேவேளை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குறித்தும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
சந்திரிக்கா தனது ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக செய்த அநீதிகளை எமது மக்கள் இன்னமும் மறந்துவிடவில்லை. நல்லிணக்கம் குறித்த செயற்பாட்டிற்று அவர் பொருத்தமானவர் இல்லை என சபை உறுப்பினர்களான க.விந்தன், எஸ்.சிராய்வா, க.சர்வேஸ்வரன், திருமதி. அனந்தி சசிதரன், து.ரவிகரன் உள்ளி;ட்ட சபை உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர். பிரதி அவைத் தலைவர் ம.அன்டனி ஜெயநாதனும் இந்னை ஆமொதித்துக் கருத்து வெளியிட்டார்.
இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மத்திய அரசு தொடர்ந்து அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்தவே முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.வடமாகாணத்தில் பல விடயங்கள் எங்களை கேட்காமல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.காணி சுவிகரிப்பு அதிகாரி என பலர் மத்திய அரசால் வடக்கில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். காணி கையேற்கும் அதிகாரி நேரடியாகவே காணிகளை கையேற்க நினைக்கின்றார். அதேபோன்று இன்னும் எத்தனை அதிகாரிகள் வந்துள்ளார்கள் என்பது எனக்குத் தெரியாது எனவும் முதலமைச்சர் கூறினார்.
வடக்கில் உள்ள அரச அதிகாரிகள் சிலர் கூட நாம் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள். மாகாண சபைக்குக் கட்டுப்பட முடியாது என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.இவை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம்கடிதம் எழுதியிருக்கின்றோம். அண்மையில் ஜனாதிபதியை சந்தித்தபோதும் இது குறித்துத் தெரிவித்துள்ளேன். நுடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்








