Breaking News

ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளின் வரிசையில் இலங்கை

ஊடகவயிலளார்களுக்கு ஆபத்தான நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்துவோரை தண்டிக்காத நாடுகளின் வரிசையில் இலங்கை ஆறாம் இடத்தை வகிக்கின்றது.கடந்த காலங்களில் இந்த பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தை வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லசந்த, எக்னெலிகொட சம்பவங்கள் குறித்து புதிய அரசாங்கம் செய்து வரும் விசாரணைகள் குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சோமாலியா, ஈராக், சிரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென்சூடான் ஆகிய நாடுகள் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலான நாடுகளின் வரிசையில் முதல் ஐந்து நிலைகளையும் வகிக்கின்றன.